சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து புது வயல் செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது கண்டனூர். இங்குள்ள வழிவிடும் விநாயகர் கோயிலில் எந்த வேண்டுதல் நிறைவேற்றினாலும் பத்துகாசு மட்டுமே காணிக்கை செலுத்திகின்றனர். பத்துகாசுக்கு மேல் செலுத்தினால் பிள்ளையாருக்குக் கோபம் வந்துவிடுமாம்!