சுத்தமல்லி ஸ்ரீஜெய்மாருதி கோயிலில் நாளை ராஜகோபுர பணி துவக்க விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2011 12:07
திருநெல்வேலி : நெல்லை, சுத்தமல்லி விலக்கு ஸ்ரீஜெய்மாருதி கோயில் ராஜகோபுர பணி துவக்க விழா நாளை(27ம்தேதி) காலை நடக்கிறது.நெல்லை அருகே சுத்தமல்லி விலக்கு, வஉசி.,நகர் ஸ்ரீஜெய்மாருதி கோயில் ராஜகோபுரம் ஸ்தாபிதம் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் கோயில் ராஜகோபுரம் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.ராஜகோபுர கட்டுமான பணி துவக்க விழா நாளை(27ம்தேதி) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஆலய ஸ்தாபகர் ஜெய்மாருதி தாசன், நாராயணன், சட்ட ஆலோசகர்கள் குற்றாலநாதன், பாலாஜிகிருஷ்ணசாமி, இளங்கோவன் மற்றும் ஜெய்மாருதி தர்மஸேவா டிரஸ்ட், ஜெய் மாருதி திருப்பணி மற்றும் கும்பாபிஷேக கமிட்டி பக்தர் பேரவையினர் கலந்து கொள்கின்றனர். 27நட்சத்திரத்தையும், 12 ராசிகளையும் உள்ளடக்கிய ராஜகோபுரத்தில் ஒரு கோடிக்கு மேல் ஸ்ரீராமஜெயம் என்ற நாமத்தை பேப்பரில் எழுதி திருப்பணி செய்து கோபுரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் ஸ்ரீராம ஜெயம் என்ற நாமகரண முத்திரை பொறிக்கப்பட்ட செங்கல்கள் கொண்டு கோபுரம் எழுப்பப்படுகிறது. எனவே பக்தர்கள் ஸ்ரீராமஜெயம் என்ற நாமகரணத்தை பேப்பரில் எழுதி கோயில் முகவரிக்கு அனுப்பலாம்.ஏற்பாடுகளை ஸ்ரீஜெய் மாருதி தர்மசேவா டிரஸ்ட், ஜெய்மாருதி திருப்பணி மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.