திருநள்ளார் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2015 05:10
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகாவன் கோவில் நவராத்திரி முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தினம் சனிஸ்வர பகவானை தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெரும் நவராத்திரியை முன்னிட்டு தினம் பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பகவான் சன்னதி அருகில் அமைக்கப்பட்ட நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் தினம் கண்டு தரிசனம் செய்கின்றனர்.மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.