பதிவு செய்த நாள்
24
அக்
2015
10:10
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, 9 தேர்களில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சைவ மற்றும் வைணவ கோவில்களான, பழையபேட்டை நரசிம்மசாமி கோவில் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், ராமர் கோவில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், திருநீலகண்டர் கோவில், பழையபேட்டை சீனிவாசர் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசாமி கோவில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிகோவில் உட்பட, 9 கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து, மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 9 தேரில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோவில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி ரோடு, காந்தி ரோடு, பழைய சப் ஜெயில் ரோடு மற்றும் சேலம் ரோடு வழியாக சென்ற, 9 தேர்களுக்கும், பக்தர்கள் தங்கள் வீட்டின் முன்பு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இரவு முழுவதும் திருவீதி உலா நடந்த பின், நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் அனைத்து தேர்களும் அணிவகுத்து நின்றன. இதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.