பதிவு செய்த நாள்
24
அக்
2015
11:10
கோவை : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பிரசாதக்கடை ஏலம், அக்., 29ல் நடக்கிறது. பேரூர் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பிரசாதக்கடை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில், விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்தது. புகார் மீதான விசாரணையை அடுத்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டு, ஏலதாரருக்கு கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. வரும், 29ல் பிரசாதக்கடைக்கான ஏலம், கோவில் வளாகத்தில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், திங்கள்கிழமை முதல், கோவில் வளாகத்தில் நடக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கமிஷனர் உத்தவின்படி, பிரசாதக்கடை ஏலம் ரத்து செய்யப்பட்டு, மறு ஏலம் நடக்கிறது. முறையாக அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு, ஏலம் நடத்தப்படும் என்றனர்.