பதிவு செய்த நாள்
26
அக்
2015
11:10
விருத்தாசலம்: விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதைö யாட்டி, கடந்த 23ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, யாகசாலை பிரவேசம், முதற்கால பூஜை நடந்தது. 24ம் தேதி இரண்டாம் கால பூஜை, விமான கலச பிரதிஷ்டை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் நான்காம் கால பூஜை, மகா தீபாராதனை, கடம் புறப் பாடு, 9:00 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.