ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சல்லிமலை வேடசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் கால யாகசால பூஜை துவங்கியது. நேற்று காலை 2 வது கால யாகசால பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 9:40 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப் பட்டது. அமைச்சர் சுந்தர்ராஜன், ராமேஸ்வரம் பேரூ ராட்சி தலைவர் அர்ச்சுணன், துணைத் தலைவர் குண சேகரன், அ.தி.மு.க., நகரச் செயலாளர் பெருமாள், கோயில் நிர்வாகி வேடராஜன் பங்கேற்றனர்.