சாயல்குடி: துரைச்சாமிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். முன்னதாக தொடர்ந்து 3 நாட்கள் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.