சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூர் மருதவனக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மருதமரத்தடியில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் 1949,1976, 1996ம் ஆண்டுகளில் நடந்தது.தற்போது கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. சுந்தரேச சிவம் சிவாச்சாரியார் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, முதல், இரண்டாம் கால யாகசாலைப் பூஜை, பூரணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 10 .20 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.10 30 மணிக்கு மருதவனக்கருப்பருக்கு நன்னீராட்டு அதை தொடர்ந்து மஹா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. குலசேவகன் வகையறா பெரி.செ.கருப்பையா, பெரி.செ.மருதமுத்து, பெரி.செ.நடராஜன், பெரி.செ.சண்முகம் குடும்பத்தினர்,முறையூர் கிராமத்தார்கள் பங்கேற்றனர்.