சாப்பாட்டை தெய்வம் போல கருத வேண்டும் என்பதற்காகத் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்தார்கள். அன்னம் பரபிரம்மம் என்பர். இதற்கு சோறே தெய்வம் என்று பொருள். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சாப்பாட்டு ராமன்களைப் பார்த்து கேலியாகச் சொல்வதுண்டு. உண்மையில், இதன் அர்த்தமே வேறு. சிவனுக்கு அன்னத்தை அபிஷேகம் செய்வதை தரிசிப்@பாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதாலேயே இப்படி கூறினர்.