கம்னு இரு, காரியம் நடக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஸ்ரீமகாகணபதி மந்திரங்களில் கம் என்பது கணபதியின் முக்கியமான மந்திர (பீஜ) எழுத்துக்களாகும். கணபதி மந்திரத்தால் தியானம் செய்து விநாயகரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். குறைவில்லாமல் எல்லாம் நடக்கும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.