பதிவு செய்த நாள்
27
அக்
2015
12:10
ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் இருந்து 48 கி.மீ., தொலைவில் ஸ்ரீநாதத்துவாரா என்ற ஊர் உள்ளது. பனாஸ் நதிக்கரையிலுள்ள இவ்வூரில் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. இந்த கிருஷ்ணரை, டாக்கூர்ஜி, ஸ்ரீநாதர் என்று அழைக்கிறார்கள். இவர் பளிங்கு கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார். இவருக்கு அலங்காரம் செய்யும் முறை வித்தியாசமானது. சமயத்தில் அலங்காரம் செய்ய விடாமல், அடமும் பிடிப்பாராம் இந்த கிருஷ்ணர்.இவரது மேனியில் ஒருவகையான பசை தடவி, அதில் ஆடையையும், ஆபரணங்களையும் ஒட்டி வைப்பார்கள். காலை 5.00 மணியில் இருந்து, மாலை 5.00 மணி வரையில் 45 நிமிடத்திற்கு ஒருமுறை அலங்காரம் மாற்றப்படும்.பெண் குழந்தை போல பின்னல் அலங்காரம், அங்கி (சுரிதார் போன்ற ஆடை) அணிந்த கோலம், தலைப்பாகை, இடுப்பில் துண்டு, கையில் கோல் வைத்து இடைச்சிறுவன் போன்ற கோலம், கிரீடம், கத்தி, கேடயம் கொண்ட ராஜ அலங்காரம் என அலங்காரம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஒருமுறை அணிவிக்கும் ஆடையை மறுமுறை அணிவிப்பது கிடையாது. புதுப்புதுஆடைகள் தைக்க, கோயிலில் ஏழு தையற்காரர்கள் பணியில் இருக்கிறார்கள்.சில சமயங்களில் அலங்காரம் செய்யும்போது அதிசயமும் நிகழும். அந்த வேளையில் இவரது திருமேனி மீது எவ்வளவு பசை தடவினாலும், அதில் ஆடை, ஆபரணங்கள் சரியாக ஒட்டாதாம். அப்போது அர்ச்சகர்கள் பாதாம்பருப்பு, கற்கண்டு, வெண்ணெய் என கண்ணனுக்கு பிடித்தவற்றை நைவேத்யம் செய்வார்கள். அப்போது, கண்மணியே, எங்கள் செல்லக்கண்ணா! நீ நல்ல பிள்ளை அல்லவா? அலங்காரம் செய்வதற்கு பிடிவாதம் செய்யலாமா? உன்னை தரிசனம் செய்து அருள்பெற பல பக்தர்கள் இங்கு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதானே அருள் செய்ய வேண்டும்!எனவே, பிடிவாதமின்றி அலங்காரம் செய்துகொள்! என்று அவரிடம் செல்லமாக கொஞ்சியும், கெஞ்சியும் வேண்டுகிறார்கள். அதன்பின்பு ஆடை, ஆபரணங்கள் சரியாக பொருந்திக் கொள்ளுமாம்.ஐநுõறு ஆண்டுகளுக்கு முன்பு, முன்னோர்கள் எழுதி வைத்த விதிகளின்படியே இவருக்கு இவ்வாறு அலங்காரம் செய்யப்படுகிறது.