Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலங்காரம் செய்ய அடம்பிடிக்கும் ... உண்மையே உயர்வு தரும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆன்மாக்கள் தினம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2015
12:10

அனைத்து ஆன்மாக்கள் தினம் (ஆல்சோல்ஸ் டே) என்னும் கல்லறை தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ல் அனுஷ்டிக்கப்படும்.பாவிகள், பரி”த்தவான்கள் என்றில்லாமல், இறந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுடைய கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி வைத்து மரியாதை செலுத்தும் தினமே கல்லறை தினம். இந்த தினத்துக்கு முந்தைய நாள் (நவ.1) சகல பரி”த்தவான்களின் தினம் என்னும் ஆல் செயின்ட்ஸ் டே அனுஷ்டிக்கப்படும். கல்லறை தினத்துக்கு வித்திட்டவர் யார் தெரியுமா? கடவுள் தான்... இந்த உண்மை பைபிளில் விளக்கப்பட்டுள்ளது. கடவுள் ஆதிமனிதனான ஆதாமை மண்ணினால் படைத்து, அவனது விலா எலும்பிலிருந்து மனைவியான ஏவாளைப் படைத்தார். அவர்கள் செய்த பாவத்தினிமித்தம், கடவுள், அவர்களை நோக்கி: பூமியின் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட படியால் மண்ணுக்கே திரும்புவாய் என்றார்.அன்றிலிருந்து உண்டான பழக்கமே, இன்று வரை உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மரித்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.கிறிஸ்துவும் மரித்த பின் அடக்கம் செய்யப்பட்டார். அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது போலவே, கிறிஸ்தவர்களும் உயிர்த்தெழுதலில் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே இறந்தோரை நித்தியமாக அழிந்து விட்டனர் எனக் கருதாமல், நல்லடக்கம் என புதைக்கின்றனர்.

நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற வன் எவனும் என்றென்றும் மரியாமலும் இருப்பான், என இயேசு கூறிய வார்த்தை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின், அவரை பின்பற்றிய சீடர்களுக்கு 40 நாட்கள் காட்சி அளித்து பின் வானத்துக்குஏறிப்போனார் என பைபிள் கூறுகிறது. அதன் அடிப்படையில் இன்று வரை, துறவறம் கொண்டவர்களை பரிசுத்தவான்கள் என்று அழைத்தனர். அவர்களுக்கென நவ.1ல், பரிசுத்தவான்களின் தினத்தைஆல் செயின்ட்ஸ் டே என்று அனுஷ்டித்து வருகின்றனர். போப் நான்காவது போனிபேஸ், கி.பி.,609 மே 13ம் தேதியை, சகல பரிசுத்தவான்களின் தினமாக மட்டும் அனுஷ்டிக்க முடிவு செய்தார். கி.பி., 731ல், போப் மூன்றாம் கிரிகொரி நவ.,1ம் தேதியில் அனுஷ்டிக்க அடித்தளம் அமைத்தார். போப் நான்காவதுகிரிகொரி, கி.பி.,837-நவ.1ம் தேதியை ஆல் ஹாலோஸ்-ஹாலோவமஸ் என சகல பரிசுத்தவான்களின் தினமாக அனுஷ்டிக்க உத்தரவிட்டார். பரிசுத்தவான்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கி.பி.,998லிருந்து பிரான்ஸ் தேசத்தில், நவ.,2ம் தேதியை பொதுவான கல்லறை தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தனர். இந்த பழக்கம் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar