பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், சித்தி விநாயகர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.செங்கல்பட்டு, பெரிய செட்டி தெருவில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் முருகன் கோவில்கள், இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவில்களில் பகுதிவாசிகள் சார்பில், மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள், கடந்த மாதம் நிறைவடைந்தன. இதையடுத்து, கடந்த 25ம் தேதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றன. நேற்று, காலை 7:00 மணிக்கு, அபவிருத யாகம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனையும், காலை 9:30 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும் நடைபெற்றன. காலை 10:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.