பனைக்குளம்: சாத்தக்கோன்வலசை மகா உக்கிர பிரத்யங்கிரா கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. அக்.,23ல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்க கடம் புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் அம்பாளுக்கு பஞ்ச திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. மூலவர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அறங்காவலர் பழனிவேலு, சிவாச்சாரியார் ரவீந்திரன், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.