பதிவு செய்த நாள்
28
அக்
2015
11:10
தர்மபுரி: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மஹாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், அன்னசாகரம் ரோடு லிங்கேஷ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய அருணேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
* காரிமங்கலம், அபிதகுஜாலாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, 5 மணிக்கு மேல், ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. 6 மணி முதல், ஸ்வாமி அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்தனர்.
* அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால் வண்ண நாதர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேககும், மாலை, அன்னாபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.