செஞ்சி: செஞ்சி தாலுகா, தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் உள்ள திருவாலிஸ்வரருக்கு ஐப்பசி மாத பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பகல் 12:00 மணிக்கு அன்னத்தினால் அலங்காரம் செய்தனர். சிறப்பு தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.