பதிவு செய்த நாள்
29
அக்
2015
11:10
திருப்பதி,:டில்லியில் நடக்கும் சீனிவாச கல்யாண உற்சவத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார், என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.திருமலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:மதுரை அரவிந்தர் கண் மருத்துவமனையை, திருப்பதியில் துவங்க, தேவஸ்தானம், ஏழு ஏக்கர் ஒதுக்கியுள்ளது. அங்கு, 100 கோடி ரூபாய் செலவில், கண் மருத்து வமனை கட்டப்பட உள்ளது. அதற்கு, மருத்துவமனை நிர்வாகம், ஆண்டுக்கு, ஏழு லட்சம் ரூபாய் வாடகை வழங்கும்.டில்லியில், 30 முதல், நவ., 1ம் தேதி வரை, வைபவோற்சவம் நடக்க உள்ளது. அதில் நடக்கும், சீனிவாச கல்யாண உற்சவத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பர். திருப்பதியில், பக்தர்களின் வசதிக்காக, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வழங்கும் மையம் விரைவில் துவங்கப்படும், என்று அவர் கூறினார்.