சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமிகள் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். தஞ்சாவூரில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் சிலா ரூபத்தை வடிவமைத்தவர் இவர் என்பார்கள். அக்கோயிலில் இவருடைய சுதை வடிவத்தைக் காணலாம். இவருடைய அதிஷ்டானம் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது.