சென்னை-மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 42 கி.மீ துõரத்தில் உள்ளது திருப்போரூர். இங்கு புகழ்பெற்ற கந்தசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் தலத்துக்கு போரி போரிமாநகர். யுத்தபுரி, சமரபுரி, சமரபதி என்று பல பெயர்கள் உண்டு. திருமால், மகாலட்சுமி, கண்வ முனிவர் ஆகியோர் வழிப்பட்ட தலம் இது. இங்கே வேம்படி விநாயகர் ஆலயம், முருகன் கோயிலுக்கு மேற்கில், சாலையின் வலப்புறம் அமைந்துள்ளது. இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, கந்தவேள் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். திருப்போரூருக்குள் நுழையும்போதே சிதம்பர சுவாமிகள் திருமடமும், சமாதியும் உள்ளன. அருகிலுள்ள பிரணவ மலையில் கயிலாயநாதரும் பாலாம்பிகையும் அருள்புரிகிறார்கள். அருணகிரியாரின் திருப்புகழ் பெற்ற இந்தத் தலத்தில், சிதம்பர சுவாமிகள் முருகனுக்கு கற்கோயில் கட்டியதுடன், அவரைத் துதித்து வழிபட திருப்போரூர்ச் சன்னதி முறை எனும் சொற்கோயிலும் கட்டினார். 726 பாடல்கள் கொண்ட இந்த பக்திப் பாமாலை, 19-ஆம் நுõற்றாண்டில் தமிழில் அதிகமான பதிப்புகளுடன் வெளிவந்த ஒரே நுõல் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்போரூரில் தினமும் வேம்படி விநாயகருக்குப் பூஜை செய்த பின்னரே மற்ற சன்னிதிகளில் பூஜை நடைபெறுகிறது. சிதம்பர சுவாமிகள் குருபூஜை தினமான வைகாசி பவுர்ணமி தினத்தில், வேம்படி விநாயகருக்கு 1008 தேங்காய்களை சமர்ப்பிக்கிறார்கள். அன்று அன்னதானமும் நடைபெறுகிறது. வேம்படி விநாயகரை வழிபட்டு அவரது திருவருள் பெறுவோம்.