Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகில் முதன்முறையாக ஒருநாள் கோடி ... பிரசவத்தையே தள்ளிப்போட்ட அந்தக் கால ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணமா! பாசமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2015
05:11

ஒரு முறை, காஞ்சி மகாப்பெரியவரைத் தரிசிக்க அரசாங்க ஊழியர் ஒருவர் வந்தார். அவர் பெரியவரை வணங்கி விட்டு, தன் கஷ்டங்களை எல்லாம் விபரமாக எடுத்துச் சொன்னார்.பெரியவா! வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம் பணம் தான் போலும்! அது போதுமான அளவு இல்லாததாலே, ரொம்பவே கஷ்டப்படுறேன். குடும்பத்தை நடத்த சிரமப்படுறேன்! கடன் வாங்கி தான் குடித்தனம் பண்ண வேண்டிஇருக்கு! என்று குறைபட்டுக் கொண்டார்.பெரியவர் அவரிடம்,போதுமான பணத்தை குடும்பத்துக்கு கொடுக்கலை அப்படிங்கிறதுக்காக, உன் சம்சாரம், குழந்தைகள் எல்லாரும் உன் மீது வெறுப்பை காட்டுறாங்களா!! இல்லே...! பிரியமாத்தான் இருக்காங்களா! என்று கேட்டார்.பெரியவா! அவங்க எல்லாரும் என் மேலே ரொம்ப அன்பாத்தான் இருக்காங்க! எனக்கு லேசா காய்ச்சல், தலைவலி வந்தா கூட தாங்க மாட்டாங்க! நல்லா கவனிச்சுக்குவாங்க! என்றார்.இதுகேட்டு சிரித்த பெரியவர், அவரிடம், சரி உட்காரு...! என்று ஓரிடத்தில் அமரச் சொன்னார். அவரும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டார். அப்போது, ஒரு பணக்காரர் தன் மனைவியுடன் பெரியவரைத் தரிசித்தார். கையில் பழக்கூடை, புஷ்பக்கூடையுடன் பெரிய மனிதருக்கே உரிய தோரணையுடன் இருந்தார். அவர் பெரியவரிடம்,பெரியவா! என்னிடம் நிறைய பணம் இருக்கு! ஆனா, உடம்பு முழுக்க வியாதி. சரியாக சாப்பிட கூட முடியவில்லை. வயதான காலத்தில் நிம்மதி இல்லாமல் கஷ்டப்படுகிறோம், என்றார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசு ஊழியர், மற்றவர்களைப் பார்க்கும் போது, தன் வாழ்க்கை எவ்வளவோ தேவலை என்று நினைத்துக் கொண்டார். பெரியவருக்கு நமஸ்காரம் தெரிவித்து விட்டு, அவரிடம் பிரசாதம் பெற்று திரும்பினார்.பணம் மட்டுமே வாழ்க்கைக்கு பிரதானமல்ல. பிள்ளைகளின் பாசம் இருந்தால், பணம்ஒரு பொருட்டல்ல என்பதையும், எல்லாருக்கும் எல்லாமும் இருக்காது என்பதையும் பெரியவர் இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
 (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar