பாடலீஸ்வரர் கோவில் நாயன்மார்களுக்கு மண்டலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2015 11:11
விழுப்புரம்: வளவனூர் அடுத்த குமாரகுப்பம் பாடலீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள், சேக்கிழார்களுக்கு மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவை யொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு கலசபூஜை, வேள்வி, 10:00 மணிக்கு 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, புதுச்சேரி சம்பந்தம் குருக்கள் குழுவினரின் இசை கச்சேரி, நாயன்மார்களுக்கு தீபாராதனை, பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.