ராசிபுரம்: ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் விழாவில், நேற்று, அதிகாலை, அம்மன் சக்தி அழைத்தல், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆர்.புதுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், புனிதநீராடி கோவில் முன் ஏற்படுத்தப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று எருதாட்டம் நிகழ்ச்சியும், மற்றும் சத்தாபரணம், வாணவேடிக்கை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.