Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பெரிய ஜீயரின் அனுக்ரஹ ... வாரியாரின் வாக்கு வன்மை! வாரியாரின் வாக்கு வன்மை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காசியும் கங்கையும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காசியும் கங்கையும்!

பதிவு செய்த நாள்

06 நவ
2015
02:11

காசி என்றால், ஒளிர்தல் என்று பொருள்; காசி நகரத்தை சுற்றி எந்நேரமும் ஒளி இருப்பதால், அந்நகருக்கு இப்பெயர் வந்தது.  இந்தியாவில், முக்தி ஷேத்திரங்கள் ஏழு; அவை, அயோத்தி, மதுரா, ஹரித்வார், அவந்தி, துவாரகை, காசி மற்றும் காஞ்சி. இந்த ஏழு நகரங்களில், எவர் ஒருவர் உயிர் நீத்தாலும், மோட்சத்தை அடைந்து விடுவர் என்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருவாரூரில் பிறந்தால், சிதம்பரத்தை தரிசித்தால், திருவண்ணாமலையை நினைத்தால், காசியில் மரித்தால் முக்தி... என்றும் சொல்வதுண்டு. காசியில் உயிர் நீப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். காசியில் தங்கி, சிவனை தரிசித்து அங்கேயே, அடங்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மாக்கள் அதிகம் பேர், கங்கை கரையில் வசித்து வருகின்றனர். இதற்காகவே, தங்களின் கடைசி காலத்தில், காசிக்கு வந்து செட்டிலாகி விடுவோரும் உண்டு. காசியில் இறக்கும் ஒவ்வொருவரையும், பார்வதி தேவி தன் மடியில் இருத்தி, தன் புடவை தலைப்பால் அவர்களுக்கு விசிறி, அந்த ஜீவன்களை ஆசுவாசப்படுத்துவாள். உயிர் அற்றுப் போன, அந்த ஜீவனின் காதில், ராம நாமத்தை உச்சரித்து, மோட்ச கதியை அருள்கிறார் இறைவன். இத்தலத்தில் இறந்தவர்கள், பிரணவ உபதேசத்தை பெற்று, சிவ சாயுஜ்யம் (இறைவனோடு கலந்து விடுதல்) அடைந்து விடுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி என்றாலே கங்கா ஸ்நானம் தான் எல்லாருடைய நினைவுக்கும் வரும். அன்றைய தினம், நாம் தலையில் தேய்த்துக் கொள்ளும் எண்ணெயில், லட்சுமி தேவியும், குளிக்கிற நீரில், கங்கையும் இருப்பதாக ஐதீகம். அன்று அதிகாலையில் குளிப்பவர்கள் எல்லாருமே கங்கையில் குளித்த புண்ணியம் பெறுவர்.

தீபாவளி தினத்தன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடுகிறோம். ஆனால், இந்த கோலாகலத்தின் பின் இருப்பது ஒரு மரணம்! ஆம்... பலரையும் பயமுறுத்தி நடுங்க வைத்த ஒரு அசுரன் மரணமடைந்த நாளையே, தீபாவளியாக கொண்டாடுகிறோம். தன் பிள்ளை நரகாசுரனின் மரணத்தை கொண்டாடும்படி, கணவரான மகா விஷ்ணுவிடம் வரம் வாங்கினாள் நரகாசுரனின் தாய் பூமாதேவி. தந்தையும், தாயும் சேர்ந்து தங்கள் பிள்ளையை சம்ஹாரம் செய்த தினத்தை, தீபாவளியாக கொண்டாடுகிறோம்.  கிருஷ்ண பகவானுக்கும், நரகாசுரனுக்கும் பகல் வேளையில் ஆரம்பித்த இந்த யுத்தம், நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாலையில், சூர்யோதயத்துக்கு சில நாழிகைகளுக்கு முன், தன் சக்ராயுதத்தால், நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் பகவான். இது நடந்தது, ஒரு ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தி தினத்தில்! தான் இவ்வுலகை விட்டு நீங்கப் போகும் சில நிமிடங்களுக்கு முன், நான் அழியப் போகும் இந்த தினத்தை, நாட்டு மக்கள் எல்லாரும் ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, இனிப்பு உண்டு, பண்டிகை போல் உற்சாகமாக கொண்டாட வேண்டும்... என்று வரம் பெற்று, அழிந்தான் நரகாசுரன்.

தீபாவளி அன்று காசியில், கங்கை நதியில் ஸ்நானம் செய்து, விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் தரிசித்து, அன்னபூரணியின் அருள் பெறுவது பூர்வ ஜென்ம புண்ணியம். ஜோதிர்லிங்க திருத்தலங்களுள் ஒன்றான காசியில், விஸ்வநாதருக்கு தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்வது கூடுதல் சிறப்பு. பக்தர்கள் அவர்களது விருப்பப்படி தேன், பால், தயிர், வில்வம் மற்றும் விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். அதிகாலை, 2:00 மணிக்கு திறக்கப்படும் விஸ்வநாதர் கோவில், இரவு, 11:00 வரை திறந்திருக்கும். தற்போது, நாம் தரிசிக்கும் விஸ்வநாதர் கோவில், 1,777ல், இந்து?ர் ராணி அகல்யா பாயால் கட்டப்பட்டது. காசி நகரத்தின் குறுகலான தெருக்களுள் நுழைந்து, இந்த கோவிலை அடைய வேண்டும்; மிகவும் சிறிய கோவில். விஸ்வநாதர் கோவிலின் அருகிலேயே அன்னபூரணிக்கு சலவை கல்லால் ஆன கோவில் அமைந்துள்ளது. ஒரு கையில், தங்கத்தாலான அன்ன பாத்திரமும், மறு கையில், தங்கத்தாலான அகப்பையும் ஏந்தி காட்சி தருகிறாள். அருகில், பிட்சாடனர்!

தீபாவளி அன்று, அன்னபூரணி, அன்னக் கொடி உற்ஸவம் நடக்கும். அன்று அம்பாளின் முன், பல வகையான அன்னங்கள் மற்றும் பலகாரங்கள் படைக்கப்படும். அப்போது, லட்டு தேரில் பவனி வருவாள் அம்பாள். தீபாவளி அன்று மட்டுமே தங்க அன்னபூரணியை தரிசிக்க முடியும். விஸ்வநாதர் கோவிலின் பின்புறம் சிறிது தொலைவில் அமைந்துள்ளது காசி விசாலாட்சி கோவில். தமிழ்நாட்டு சிற்பக்கலையில் உருவான ராஜ கோபுரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது இக்கோவில். தனி சன்னிதியில், நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள் அன்னை விசாலாட்சி. நகரத்தார்களின் பொறுப்பில் இந்த ஆலயம் இருந்து வருகிறது. காசி மாநகரத்தில், மேலே கூறப்பட்ட ஆலயங்கள் தவிர, சுயம்பு லிங்கங்கள் அமைந்த கோவில்கள் 11, தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்கள் அமைந்த கோவில்கள் 46, மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்கள் அமைந்த கோவில்கள் 47, நவக்கிரகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்கள் அமைந்த கோவில்கள் 7, சிவனடியார் களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்கள் அமைந்த கோவில்கள் 50, பாரத தேசத்தில் உள்ள சிவ ஷேத்திரங்களின் திருப்பெயர்களால் ஸ்தாபிதம் பெற்ற கோவில்கள், 511 உள்ளன. விநாயகர் பெயரில் அமைந்த கோவில்கள் 56, காசி நகரத்தின் எட்டுத் திசைகளில் உள்ள பைரவர் கோவில்கள் எட்டு மற்றும் ஸ்ரீமந் நாராயணனுக்கு அமைந்த கோவில்கள் எட்டு என்று, காசி நகரம் முழுக்க எண்ணற்ற திருக்கோவில்கள் அமைந்து, ஒரு மகா ஷேத்திரமாகவே காட்சி தருகிறது.

எத்தனையோ கோவில்கள் காசியில் இருந்தாலும், இங்கே பைரவர் தான் பிரதானம். காசியின் காவல் தெய்வமே அவர் தான். கங்கை நீரில் மூழ்குவதால், நம் வினைகள் அனைத்தும் நீங்கி, பாவங்கள் அகல்கின்றன என்று கருத்து பகவத்கீதை உட்பட அனைத்து புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. கங்கையின் பிறப்பிடமும், கலப்பிடமும் எங்கோ இருந்தாலும், பாயும் பகுதிகளின் கரைகளில், எத்தனையோ நகரங்கள் இருந்தாலும், கங்கை என்றால் காசி தான் எல்லாருடைய நினைவுக்கும் வரும். கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. உலகில் உள்ள மிகப் பெரிய நதிகளுள் ஒன்று கங்கை; கடல் மட்டத்தில் இருந்து, 13,800 அடி உயரத்தில் இமயமலையில் இருந்து உற்பத்தி ஆகிறது கங்கை நதி. இந்த இடத்திற்கு பெயர், கங்கோத்ரி; இது, கர்வால் பிரதேசத்தில் ருத்ர இமாலாயம் ?எனும் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. இங்கே, கங்கா தேவிக்கு கோவிலும் இருக்கிறது.  வெண்மையான மேகங்கள் போல் அணி திரண்ட பனி குகையில், சில்லென்று உருவாகும் இந்த கங்கை நதி, சீறிப் பாய்ந்து தொடும் முதல் சமவெளிப் பிரதேசம் ஹரித்வார்! அங்கிருந்து உத்தரபிரதேசத்தில் நுழைந்து, பிரயாகையில், யமுனையோடு கலக்கிறது. இதன்பின், புனிதமான காசியம்பதியில் பயணமாகி, வங்காள தேசத்தில் புகுந்து, பல உப நதிகளாகவும் பிரிகிறது. இறுதியில், நவகாளி என்ற இடத்தில் கடலோடு சங்கமமாகிறது. தெய்வங்களுக்கு நாம் செய்யும் பூஜைகளில் கூட, கங்கே யமுனே சைவ கோதாவரீ ஸரஸ்வதி... நர்மதே ஸிந்து காவிரி ஜலே அஸ்மின் ஸந்நிதம் குரு என்று நதிகளின் பெயரை உச்சரித்து, தீர்த்தப் பாத்திரத்தில் ஆவாஹணம் செய்வது வழக்கம்.

சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணம் செய்து சில காலம் பூலோகத்தில் வாழ்வதற்கு, அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் காசி. காசியில் உள்ள மலர்களின் செழிப்பும், வாசனையும் தேவியை மயக்குகிறது. இக்காரணத்தால், காசிக்கு, ஆனந்தவனம் என்ற பெயரும் உண்டு; இத்தகவல்கள், காசி காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. பிரளய காலத்திலும், அழியாத பூமி இது! காசியின் புகழ்பாடும் நு?ல்களுள் குறிப்பிடத்தக்கது. காசி காண்டம்! இதை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன். முற்காலத்தில், தென்காசி நகரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான் அதிவீரராம பாண்டியன். காசியின் மீது மிகுந்த பிடிப்பும் பற்றும் கொண்டு, தான் ஆட்சி புரியும் பிரதேசத்துக்கு, தென் காசி என பெயர் வைத்தான். பொங்கிப் பெருகி வரும் கங்கையில், ஏராளமான படித் துறைகள் உள்ளன. இதை இந்தியில், காட் என்றும், கட்டம் என்றும் கூறுவர். கங்கை நதி பாயும் காசி மாநகரில், ?4 படித்துறைகள் உள்ளன. காசிக்கு யாத்திரையாகச் செல்லும் அன்பர்கள் ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி, கங்கையில் பயணித்தால் இங்குள்ள, 64 கட்டங்களையும் தரிசிக்கலாம். அனைத்துப் படித்துறைகளிலும் நீராட லாம் என்றாலும், முக்கிய மாக ஐந்து படித்துறைகளில் நீராடுவது சிறப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த ஐந்து படித்துறைகளில் நம் பித்ருக்களுக்கு நீர்க் கடன்கள் செய்வது விசேஷம். இங்கே நீர்க் கடன்கள் செய்தால், பித்ரு லோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் பெரிதும் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வதிப்பர்.

அந்த ஐந்து படித்துறைகள்: அஸி சங்கம கட்டம், தசாஸ்வமேத கட்டம், வருணா சங்கம கட்டம், பஞ்ச கங்கை கட்டம் மற்றும்  மணிகர்ணிகா கட்டம்! இந்துக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் கயிலாய தரிசனம் செய்கிறோமோ இல்லையோ, அவசியம் காசியை தரிசிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு முறை யாவது காசி யாத்திரை சென்று வர, காசி விஸ்வநாதர் அருள் புரியட்டும்!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar