4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்தி பகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன்?
5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு?
6. அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல்மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு?
7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே: பின்ன இட்ட தீ தென் இலங்கையில்: அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!
8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுநே பாவியேன் ஐயகோ! - மாகக் குருவிபறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை:
9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய்?
10. வீற்றிருந்தாள் அன்னை: வீதிதனில் இருந்தாள்! நேற்றிருந்தாள்: இன்று வெந்து நீறானாள்: பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்!