10. ஓடும் எடுத்து அதள் ஆடையும் சுற்றி, உலாவிமெள்ள வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போல் ஆடும் அருள் கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டிதன்னைத் தேடுங் கணக்கென்ன காண்! சிவ காம சவுந்தரியே.
7. வினைப்போகமே ஒரு தேகங்கண்டாய்! வினை தான் ஒழிந்தால் தினைப்போ தளவும் நில்லாதுகண்டாய்! சிவன் பாதம்நினை! நினைப்போரை மேவு: நினையாரை நீங்கி இந்நெறியில் நின்றால் உனைப்போல் ஒருவருண்டோ மன மே எனக்கு உற்றவரே?
8. பட்டைக் கிழித்துப் பருஊசி தன்னைப் பரிந்தெடுத்து, முட்டச் சுருட்டி என்மொய்குழ லாள்கையில் முன்கொடுத்து கட்டியிருந்த கனமாயக்காரி தன் காமம் எல்லாம் விட்டுப் பிரிய என் றோ இங்ங னேசிவன் மீண்டதுவே?
9. சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ்பொருளும் போதுற்ற பூசலுக்கு என்செய லாம்? செய்த புண்ணியத்தால் தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கைதனிலே?
15. சீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை: தினம் இரந்து நீ துயக்கச் சோறு மனைதோறும் உண்டு. நினைவெழுந்தால் விதிக்கு நல்ல விலைமாதர் உண்டு. இந்த மேதினியில் எதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே?
19. மாத்தா வைத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பார் பற்று அற்றவரே!
20. ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு! உயர் செல்வமெல்லாம் அன்றென் றிரு! பசித்தோர் முகம் பார்! நல்லறமும் நட்பும் நன்றென் றிரு! நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென் றிரு! மனமே உனக்கே உபதேச மிதே.
22. என் செயலாவது யாதொன்றும் இல்லை: இனித் தெய்வமே! உன் செய லேயென்று உணரப்பெற்றேன்: இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே!
23. திருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடிவந்து பரிவாகப் பிச்சை பகருமென் றானைப்பதம் பணிந்தேன்: கருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை உருவாக்கிக் கொள்ள வல்லோ இங்ங னேசிவன் உற்றதுவே!
24. விட்டேன் உலகம்: விரும்பேன் இருவினை: வீணருடன் கிட்டேன்: அவர் உரை கேட்டும் இரேன்: மெய் கெடாத நிலை தொட்டேன்: சுகதுக்கம் அற்றுவிட்டேன்: தொல்லை நான் மறைக் எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே!(கும்)
25. அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும் விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழந் திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே.
26. எரி எனக்கென்னும், புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும், சரி எனக் கென்னும், பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க நரி எனக் கென்னும். புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தேன்: இதனால் என்ன பேறு எனக்கே?
27. அண்ணல்தன் வீதி அரசிருப் பாகும். அணி படையோர் நண்ணொரு நாலொன்பதாம்: அவர் ஏவலும் நண்ணும் இவ்வூர் துண்ணென் பசிக்கு மடைப்பள்ளியான சுகமுமெல்லாம் எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ணரிதே!
42. விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப் பதியார் துடைப்பும் நம் பால் அணுகாது: பரமானந்தமே கதியாகக் கொண்டுமற் றெல்லாம் துயிலில் கனவென நீ மதியா திருமன மே! இது காண் நல் மருந்துனக்கே!
43. நாய்க்குண்டு தெண்டு: நமக்குண்டு பிச்சை: நமனைவெல்ல வாய்க்குண்டு மந்திர பஞ்சாட் சரம் மதி யாமல்வரும் பேய்க்குண்டு நீறு: திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி நோய்க்குண்டு தேசிகன் தன் அருள் நோக்கங்கள் நோக்குதற்கே!
44. நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்த்ர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே
45. நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்கிலை நன்னெஞ்சமே! ஏன் இப்படிகெட் டுழலுகின்றாய்? இனி ஏதுமில்லா வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல் போனத்தை மீள நினைக்கின்றனை: என்ன புத்தியிதே!
46. அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிருந்த ஐம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே!
47. தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள் நீயாரு? நானார்? எனப்பகர் வார் அந்த நேரத்திலே நோயாரும் வந்து குடிகொள்வரே: கொண்ட நோயும் ஒரு பாயாரும் நீயுமல்லால் பின்னையேது நட் பாமுடலே!
48. ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அரும் கிருமி தோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டுவிட்டால் பேயும் நடனம் இடும் கடமாம் என்று பேசுவதை நீயும் அறிந்திலையோ? பொருள் தேட நினைந்தனையே!
49. பூணும் பணிக்கல்ல பொன்னுக்குத் தானல்ல பூமிதனைக் காணும் படிக்கல்ல மங்கையர்க்கல்ல நற் காட்சிக்கல்ல சேணுங் கடந்த சிவனடிக் கல்ல என் சிந்தை கெட்டுச் சாணும் வளர்க்க அடியேன் படுந்துயர் சற்றல்லவே
56. ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே! அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி! அநாதியனை மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்தில் உன்னி விழியால் புனல் சிந்தி விம்மியழு நன்மை வேண்டுமென்றே
57. நாய்க்கொரு சூலும் அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ? பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ? பெரும் காஞ்சிரங்காய் ஆக்குவர் ஆர்? அருந்துவர் ஆர்? அதுபோல் உடம்பு தீக்கிரை யாவதல்லால் ஏதுக்கு ஆம்? இதைச் செப்புமினே!
58. கச்சில் கிடக்கும் கனதனத்தில் கடைக் கண்கள் பட்டே இச்சித் திருக்கின்ற ஏழை நெஞ்சே! இமவான் பயந்த பச்சைப் பசுங்கொடி உண்ணா முலை பங்கர் பாதத்திலே தைச்சுக் கிடமனமே! ஒரு காலும் தவறில்லையே
59. மானார் விழியைக் கடந்தேறி வந்தனன்; வாழ்குருவும் கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன்: குற்றமில்லை போனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது: பொய் யன்றுகாண். ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே!
60. சற்றாகிலும் தன்னைத் தானறியாய்! தனை ஆய்ந்தவரை உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய்! உனக்கான நிலை பற்றாய்! குருவைப் பணியாய்! பரத்தையர் பாலில் சென்று என் பெற்றாய்? மடநெஞ்சமே! உனைப் போல இல்லை பித்தனுமே!
61. உள்ளிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப் புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே யிருத்துவதுள் இண்மையென்று வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே!