15 அருந்தின மலமாம். புனைந்தன அழுக்காம்: உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்: என்றிவை அனைத்தும் உணர்ந்தனை: அன்றியும்: பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும் அனைத்து நினைக்கொன்றன.
20. தின்றனை அனைத்தும் அனைத்து நினைத் தின்றன பெற்றனை அனைத்தும் அனைத்து நினைப் பெற்றன: ஓம்பினை அனைத்தும் அனைத்து நினை ஓம்பின: செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை: கவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை:
30. பிணமாய்க் கிடக்கும் பிண்டம்: பிணமேல் ஊரில் கிடக்க வொட்டா உபாதி: கால் எதிர் குவித்தபூளை: காலைக் கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்: அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்:
35. அதிரும் மேகத்து உருவின் அருநிழல்; நீரில் குமிழி: நீர்மேல் எழுத்து: கண் துயில் கனவில் கண்ட காட்சி: அதனினும் பொல்லா மாயக் களங்கம்: அமையும் அமையும் பிரானே! அமையும்.