5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகாது அவமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்
30. துப்பு முருக்கின் தூயமலர் என்றும் அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும் முன்னிய பல்லை முத்தென மொழிந்தும் நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும் கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்
35. தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும் உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும் கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
40. வெய்ய வதரும் பேனும் விளையத் தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும் சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சித் செல்லும் நரக வாயில்