7. எத்தனை ஊர்? எத்தனை வீ(டு) எத்தனை தாய்? பெற்றவர்கள் எத்தனை பேர் இட்டழைக்க ஏன் என்றேன் நித்தம் எனக்குக் கலையாற்றாய் ஏகம்பா கம்பா! உனக்குத் திருவிளையாட்டோ?
4. நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும் இச்சையிலே தான் அங் கிருப்பதுவும் பிச்சைதனை வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே தூங்குவதும் தானே சுகம்.
5. இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க அழைத்தாலும் போகேன் அரனே! என்தேகம் இளைத்தாலும் போகேன் இனி.
6. விட்டுவிடப் போகுதுயிர்! விட்ட உடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு) எந்நேரமும் சிவனை ஏந்துங்கள்! போற்றுங்கள்! சொன்னேன் அதுவே சுகம்.
7. ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி என்று நாமம் படையாதே மேவியசீர் வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே! செத்தாரைப் போலே திரி.
8. வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது! கட்டளையும் கைப்பணமும் காணாதே!- இட்டமுடன் பற்றென்றால் பற்றாது: பாவியே நெஞ்சில் அவன் இற்றெனவே வைத்த இனிப்பு.
9. இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சமே! வைப்பிருக்க வாயில் மனை இருக்கச்-சொப்பனம்போல் விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தபஞ் சிட்டு அப்பைக் கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.
10. மேலும் இருக்க விரும்பினையே! வெள்விடையோன் சீலம் அறிந்திலையே! சிந்தையே! கால்கைக்குக் கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்ட உடல் கட்டை இட்டுச் சுட்டுவிடக் கண்டு.
14. எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம் இவை? அத்தனையும் மண்திண்ப தல்லவோ? வித்தகனார் காலைப் பிடித்து மெள்ளக் கங்குல்பகல் அற்ற இடத்தே மேலைக் குடியிருப்போமே!
15. எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர் எச்சில் இருக்கும் இடம் அறியீர் - எச்சில்தனை உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும்: பின் சித்த நிராமயமா மே.
16. எத்தனை பேர் நட்டகுழி? எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்? நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு உய்யடா! உய்யடா! உய்!
18. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ - வித்தகமாய்க் காதிவிளை யாடி இரு கைவீசி வந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான்!
19. மாலைப் பொழுதில் நறு மஞ்சள் அரைத் தேகுளித்து வேலை மினுக்கிட்டு விழித்திருந்து - சூலாகிப் பெற்றாள்: வளர்த்தாள்: பெயரிட்டாள்: பெற்ற பிள்ளை பித்தானால் என்செய்வாள் பின்?
20. நாப்பிளக்கப் பொய் உரைத்துநவநிதியம் தேடி நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப் பூப்பிளிக்க வருகின்ற புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் காப்பதற்கும் வகையறியீர்: கைவிடவும் மாட்டீர்! கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட்டீரே!
21. மத்தளை தயிர்உண்டானும் மலர்மிசை மன்னி னானும் நித்தமும் தேடிக் காணா நிமலனே நீஇன் றேகிச் செய்தகளை கயல்பாய நாங்கூர் சேந்தனை வேந்தன் இட்ட கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டு ளானே!