பதிவு செய்த நாள்
07
நவ
2015
11:11
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, கோனேரிப்பட்டி மேற்கு காலனி ஐயப்பன் கோவிலில், கும்பாபிஷேக விழா வரும், 18ம் தேதி நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, கோனேரிப்பட்டி மேற்கு காலனியில், புதியதாக பஞ்சமுக கணபதி, சண்முகர், ஐயப்பன் கோவில் கட்டப்பட்டது. இதையடுத்து, கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 18ம் தேதி நடக்கிறது. முன்னதாக, வரும், 16ம் தேதி முதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதியும், காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்தங்கிரஹனம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 17ம் தேதி, தத்வா அர்ச்சனை, இரண்டாம் காலயாகபூஜை, பூர்ணாகுதி தீபாரதனை, புதிய சிலைகளுக்கு கண் திறப்பு, அஷ்டபந்தனம் சாற்றுதலும், விமான கலசத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், நவதானிய பூஜை, கோபுரத்திற்கு கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 18ம் தேதி, காலை 6 மணிக்கு நாடி சந்தானம், நான்காம் கால யாகபூஜை, மஹாபூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9.30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.