குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2015 09:11
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் தொடங்கியது. கேரளா, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு தொடங்கியது. திருவிதாங்கூர் பூயம் திருநாள் கவுரி பார்வதிபாய் துவக்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சந்திரமோகனன் தலைமை வகித்தார். செம்பை நினைவு விருது குருவாயூர் துரைக்கு வழங்கப்பட்டது. தினமும் மாலை 6:00- இரவு 7:00 மணி வரை கச்சேரிகள் நடைபெறும். நவ.,22ல் உற்சவம் நிறைவு பெறுகிறது.நேற்று முன்தினம் காலை 11.00 மணிக்கு, செம்பை கிராமத்தில் இருந்து செம்பை வைத்தியநாத பாகவதரின் தம்புராவை, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. தேவஸ்தான உறுப்பினர் சுரேஷிடம் தம்புராவை, செம்பை வித்யா பீட துணைத்தலைவர் செம்பை சுரேஷ், செயலர் கீழத்துார் முருகன் வழங்கினர். மாலை 5 மணிக்கு குருவாயூர் மம்மியூர் கோவில் அருகே தம்புராவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தம்புரா, உற்சவம் நடக்கும் மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.