பதிவு செய்த நாள்
11
நவ
2015
11:11
சேலம்: சுமங்கலி இன்று மேற் கொள்ளும், கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, சேலத்தில்
நேற்று நோன்பு கயிறு, பூஜை பொருட்களின் விற்பனை கனஜோராக நடந்தது.
தீபாவளி பண்டிகைக்கு பின் வரும் அமாவாசை தினத்தில், ஆண்டு தோறும் சுமங்கலிகள்,
தங்களின் தாலி பாக்கியம் நிலைக்கவும், கணவர்களின் ஆயுள் காலம் அதிகரிக்கவும், வீட்டில்
மங்களரமான நிகழ்ச்சிகள் தொடர, கேதார கவுரி விரதம் மேற் கொள்வது வழக்கம். அந்த
வகையில், இன்று கேதார கவுரி விரதம் கடை பிடிக்கப்படுகிறது. இதற்காக, நேற்று, சேலம்,
சின்னக்கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில், நோன்பு கயிறு, தேங்காய், பழம்
உள்ளிட்ட பூஜை பொருட்கள், பூக்களின் விற்பனை கனஜோராக நடந்தது.
இதில், நோன்பு கயிறின் விற்பனை அதிகரித்ததை அடுத்து, அவற்றின் விலையை, இரண்டு ரூபாய் முதல், நான்கு ரூபாய் வரை அதிகரித்தனர். இதே போல், பூஜை பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டது. இருந்த போதிலும், விரதம் கடைபிடிப்பதற்காக, பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல், பொருட்களை வாங்கிச் சென்றனர்.