வடமதுரை: அய்யலூர் களர்பட்டி ரயில்வே கேட் அருகில் நல்வழி காட்டும் செல்வ விநாயகர் கோயில் இருந்தது. கேட் கீப்பர் அறை அருகில், அரச மரத்துடன் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த இக்கோயில், திண்டுக்கல்- திருச்சி இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்காக கடந்தாண்டு அகற்றப்பட்டது.
ஓராண்டிற்கு பின்னர் முத்துநாயக்கன்பட்டி வளைவு அருகில் கிராம மக்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. களர்பட்டி, சந்தைப்பேட்டை, முத்துநாயக்கன்பட்டி, குறிஞ்சிநகர், நாகப்பபிள்ளைகளம், கடைவீதி, குளத்துபட்டி, கோடாங்கிசின்னான்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.