ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் நாளை முதல் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகளும், 7.30 மணிக்கு முருகன்,வள்ளி,தெய்வானை வீதியுலாவும் நடக்கிறது. 6ம் திருநாளான நவ.,17 சஷ்டியை முன்னிட்டு காலை 10 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 7ம் திருநாளான நவ. 18 இரவு 8 மணிக்குமேல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் நாராயணி, தக்கார் ராமராஜா செய்துள்ளனர்.