பதிவு செய்த நாள்
12
நவ
2015
11:11
பாகூர்: ஐப்பசி அமாவாசை மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், மகா ருத்ராபிஷேகம் நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத அமாவாசை மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, மகா ருத்ராபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 6.00 மணிக்கு, பாலகணபதி, முருகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை 10.00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு அபிேஷக ஆராதனைகள் செய்து மகா ருத்ராபிஷேகம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு, பைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.