Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏரல் சேர்மன் கோயிலில் ஆடி அமாவாசை ... சிவன் கோவிலில் 25 ஆண்டு தேர் பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
12:07

புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஆரம்பமாகியது. ஆகஸ்ட் 14ம் தேதி முடிய விழா தொடர்ந்து நடக்கிறது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்றுமுன்தினம் இரவு அம்மனுக்கு காப்புகட்டும் வைபவத்துடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள், மாகாணத்தார்கள் மற்றும் அரசுத்துறையினர் சார்பில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அம்மன் வீதியுலா வருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 3, 4 ஆகிய இருதேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சர்வ அலங்காரத்துடன் வீரமாகாளியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இத்தேர்த்திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிக்கின்றனர். விழாவை முன்னிட்டு கோவிலைச் சுற்றி மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சி ஆகஸ்ட் மூன்றாம் தேதி முடிய தொடர்ந்து நடக்கிறது. இதில், மகளிருக்கான ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், செட்டிநாடு தின்பண்டங்கள், ஊறுகாய் வகை, நர்ஸரி மற்றும் மூலிகை செடி, மண்பாண்ட கலை பொருள், ஃபேன்ஸி பொருள், மசால் பொடி ஆகியவை விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான பொருட்களாக விற்பனை செய்யப்படுவதால் இவற்றை பக்தர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கோவை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன மடம் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் ... மேலும்
 
temple news
கும்பகோணம்: நவகிரக கோயில்களில் ராகு பரிகார ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar