பதிவு செய்த நாள்
16
நவ
2015
11:11
திருப்பூர் : ஸ்ரீசத்யசாயி பாபா, 90வது அவதார தின விழாவை முன்னிட்டும், திருப்பூர் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி, 50வது ஆண்டு, பொன் விழாவை முன்னிட்டும், 19 முதல், 23 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் கூறியதாவது: தினமும் காலை, 5:00க்கு, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் நடைபெறும். மாலை, 5:30க்கு, வேத பாராயணம், சாயி பஜன் நடக்கிறது. மாலை, 6:30க்கு, சிறப்பு சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, சாயி கீதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 23ம் தேதி, காலை, 7:00க்கு, பிரசாந்தி கொடியேற்றுதல், கோடி நாம ஜெபம் நிறைவு, காலை, 9:00க்கு, நாராயண சேவை எனப்படும் அன்னதானம், மாலை, 6:00க்கு, பொன் விழா சிறப்புரை, ஊஞ்சல் உற்சவம், மகா மங்கள ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், உலக அமைதி வேண்டி, 24 மணி நேரம் தொடர் பஜனை, பி.என்., ரோடு, ராம்நகர் சேவா சமிதி மையம் மற்றும் உடுமலை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் கிளைகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00க்கு துவங்கியது. நேற்று மாலை, 6:00க்கு, பஜனை நிறைவு மற்றும் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.