விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்க ஈஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் ஜோதி விருட்சம் என்ற மரம் இருக்கிறது. இந்தமரத்தின் இலையை ஒரு கிண்ணத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி திரிபோல எரியவைக்கிறார்கள். ஒரு இலை 15 மணி நேரம் எரியும் சக்தி வாய்ந்தது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த இலையையே தீப திரிக்கு பதிலாக பயன்படுத்துகிறார்கள்.