எந்தக் கோயிலுக்கு சென்றாலும் கருவறையை வணங்கிவிட்டு முதல் பிரகாரத்தின் வழியாகத்தான் கோயிலைச்சுற்றும் வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களிலேயே கருவறையை சுற்றி வரும் வகையில் உள்பிரகாரம் கொண்ட அமைப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி கோயிலில் மட்டுமே உள்ளது. இங்குள்ள கைலாசநாதர் - மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த வசதி இருக்கிறது. இந்த கோயில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.