1. திருக் கார்த்திகை என்றவுடன் தீபம் மட்டுமின்றி, தமிழ் கடவுள் முருகப் பெருமானும் சேர்ந்தே நம் நினைவுக்கு வருகிறார்.
2.சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்த தோன்றிய ஆறு சுடர்கள் சரவணப் பொய்கையில் விழுந்து, அவை 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர்.
3. இந்த 6 குழந்தைகளும் ஒரே குழந்தையாகி உருவானவர்தான் முருகப்பெருமான். இதனால்தான், அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் வந்தது.