பதிவு செய்த நாள்
19
நவ
2015
10:11
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுாரில், பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலுக்கு, 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து, 14 ஆண்டு களுக்கு பின், மகா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது.இதற்காக, 105 அடி அகலம், 80 அடி நீளத்தில், 41 குண்டங்களுடன், பிரம் மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, 15ம் தேதி, விக்னேஸ்வரர் பூஜையுடன் விழா துவங் கியது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ஹாலாஸ்யநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள், கும்பா பிஷேகத்தை நடத்தினர்.பரிவார மூர்த்தி களுக்கும், அங்காள பரமேஸ்வரி அம்மன் சன்னதி மூல ஸ்தானத்திற்கும், காலை 10:15 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.