ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2015 11:11
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, கடந்த 12ம் தேதி கந்த சஷ்டிவிழா துவங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. கடந்த 16ம் தேதி நவ வீரர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை களும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது. பக்தர்கள் முருகன், நவவீரர்கள், சூரபத்மன் வேடமணிந்து முருகன் பாடல்களை பாடியபடி öŒன்றனர். இரவு கோவில் எதிரில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று சுவாமிக்கும் வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜை களை செய்தனர். விழா ஏற்பாடுகளை செங்குந்தர் வகையறாவினர் செய்திருந்தனர்.