ஆண்டாள் கோயில் கோபுரத்தில் தங்க தகடு பொருத்தும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2015 11:11
ஸ்ரீவில்லிபுத்துார் :ஸ்ரீ வில்லிபுத்துார் ஆண்டாள்கோயில் விமானகோபுரத்தில் தங்கதகடு பொருத்தும் பணி துவங்கியது.இக்கோயிலுக்கு கடந்த 2000 பிப்., 10ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் 2012ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக 2009 செப்டம்பர் 7ல் பாலாலய பூஜைகள் செய்யபட்டு, திருப்பணிகள் துவங்கின. ஆண்டாள் கோயில் திருப்பாவை விமான கோபுரத்தை தங்ககோபுரமாக மாற்றியமைக்க முடிவு செய்யபட்டது. இதற்காக ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா தலைமையிலான ஸ்ரீநாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலம் 76கிலோ தங்கம் நன்கொடையாக பெறபட்டு தங்கதகடுகள் தயாரிக்கும்பணி நடந்தது.இப்பணிகள் முடிந்தநிலையில் நேற்று முதல் திருப்பாவை விமான கோபுரத்தில் தங்கதகடுகள் பொருத்தும் பணி துவங்கியது. இதற்காக காலையில் அனந்தசயனபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள்நடந்தன. இதில் மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோபராமனுஜர் ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன், அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சுந்தரமூர்த்தி, அனிதா, ஹரிஹரன், செயல் அலுவலர் ராமராஜா உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். இப்பணி 20 நாட்களில் முடிவடைய உள்ளதையடுத்து , 2016 ஜனவரி 20ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.