பதிவு செய்த நாள்
20
நவ
2015
11:11
சிவகங்கை: ஒக்கூர் சசிவர்ண விநாயகர் கோயில், சுப்பிரமணியன் சன்னதியில் தலைவர் சேக்கப்ப செட்டியார் தலைமையில் திருக்கல்யாணம் நடந்தது. உபயதாரர் சோமசுந்தரம் செட்டியார் முன்னிலை வகித்தார். முத்து சுப்பிரமணியன் வரவேற்றார். சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. காலை முதல் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர், தயிர்,நெய், தேன், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. ஆலய தலைமை குருக்கள் நடராஜ சிவச்சாரியார் தலைமையில் அபிஷேக, ஆராதனை நடந்தது. கண்ணதாசன் பேரவை தலைவர் தளவாய் நாராயணசாமி, ஆசிரியர் நரசிம்மன், பொறியாளர் திருஞானம், டாக்டர் சந்திரன், தொழிலதிபர் சம்பத் செட்டியார் பங்கேற்றனர். சுப்பையா செட்டியார் நன்றி கூறினார். ஏற்பாட்டை சுந்தரம்செட்டியார் செய்திருந்தார்.