Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்ணீர் வருமா... காத்திருக்கும் ... சத்ய சாய்பாபா பிறந்த நாள்: ஆன்மிக பேரணி, ரத ஊர்வலம்! சத்ய சாய்பாபா பிறந்த நாள்: ஆன்மிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெண்ணியம்மன் கோவிலில் வரும் 29ம் தேதி கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
வெண்ணியம்மன் கோவிலில் வரும் 29ம் தேதி கும்பாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

23 நவ
2015
10:11

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ரெட்டணையிலுள்ள வெண்ணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடக்கின்றது. திண்டிவனம் தாலுகா, ரெட்டணை கிராமத்தில், அன்னை  ஸ்ரீ வெண்ணியம்மன் கோவில், 7ம் நுõற்றாண்டில் அமைக்கப்பட்டது. இந்த அம்மன் வடக்கே இமய மலையில் உள்ள வைஷ்ணவி தேவியின் ரூபமாக உள்ளார்.  கருவறையில் அன்னையின் ஏழு உருவங்களும் ஒன்றாகவும் (பிராமஹி, மகேஸ்வரி,  கௌமாரி, ஸ்ரீவெண்ணியம்மன், வராஹி, இந்திராணி, சாமூண்டி) மற்றும் சிவபெருமானின் குரு உருவமான தட்சிணாமூர்த்தி பெருமானை  மேல்பக்கத்திலும், கீழ்பக்கத்தில் முழு முதற்கடவுளான விநாயகப்பெருமானும் நடுநாயகியாக வைஷ்ண மூர்த்தியின் உருவமான  வெண்ணியம்மன்  அமையப் பெற்றுள்ளது. நடுநாட்டின்கண் வடபால் விநாயகரின், திருத்தலமாக தீவனுõரையும், தென்கிழக்கில் பிரணவப் பொருள் உரைத்த முருகப்  பெருமானின் திருத்தலமான மயிலம் ஷேத்திரத்தை உடையதாயும்,  மேல் திசையில் சங்கராபரணியையும், கீழ்திசையில் தொண்டி ஆற்றினையும்,  காசி ராமேஸ்வரம் பாட்டையில் உள்ள ரெட்டணை கிராமத்தில் வெண்ணியம்மன் கிராம தேவதையாக வீற்றுள்ளார். வெண்ணியம்மனுக்கு  ஆண்டுக்கு ஒருமுறை சகோதரியாகிய குளுந்தி அம்மனை சங்கராபரணி ஆற்றிலிருந்து அழைத்து வந்து,  ஐதீகமாக கோவிலில் விட்டுவிட்டு,  வெண்ணியம்மன் வீதியுலா வருவாள். ஏற்கனவே சிறிய கல்மண்டபத்தில் அருள்பாலித்து வந்த நிலையில், கடந்த  2000ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி  கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவிலின் பழுதுகள் நீக்கி, புதிய சிற்ப பஞ்சவர்ண வேலைப்பாடுடன் புதுப்பிக்கப்பட்டு, வரும் 29ம் தேதி  (ஞாயிற்றுக்கிழமை) காலை 7:30 மணி முதல் 9.00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம்  நடக்கிறது.  கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை, கோவில்  தர்மகர்த்தா கிருஷ்ணக்கவுண்டர் மற்றும் நிர்வாகிகள் செ#து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar