பதிவு செய்த நாள்
23
நவ
2015
10:11
புதுச்சேரி: சத்யா சாய் பாபாவின் 90வது பிறந்தநாளையொட்டி, லாஸ் பேட்டை குறிஞ்சி நகர் விநாயகர் கோவிலில் ஆன்மிக பேரணி மற்றும் ரத ஊர்வலம் துவக்க விழா நடந்தது. கவான் சத்ய சாய் பாபா வின் ரத ஊர்வலத்தை போக்குவரத்து எஸ்.பி.,குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் சாய் பஜனை பாடல்கள் பாடினர். சத்ய சாய் பாபா செய்த சேவை பணிகள் விளக்கும் வகையில் ஒன்பது நகரும் ஊர்த்திகள் அணிவகுந்தன. ரத ஊர்வலத்தில் கடவுள் ஒருவரே, மதங்களின் ஒற்றுமை, நாம சங்கீர்த்தனம், பஜனை, சாய் இலக்கிய புத்தகங்கள், சத்ய சாய் பாபாவின் இலவச உயர் சிகிச்சை மருத்துவமனைகள், பாபாவின் ஒன்பது கோட்பாடுகள், கிராம சேவை, அனந்தபூர், மேடக், மகபூப் நகர், சென்னை நகரங்களுக்கு சத்ய சாய் பாபா தந்தருளிய இலவச குடிநீர் திட்டங்கள், பேரிடர் மேலாண்மை, யோகா, இயற்கை மருத்துவம் குறித்த புகைப்படங்கள நகரும் ஊர்த்தியில் இடம் பெற்றன. ஆன்மிக பேரணி, ரத ஊர்வலம் லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோடு, பெத்திசெட்டிப்பேட்டை, புதுப்பேட்டை வழியாக லாஸ்பேட்டை அய்யனார் கோவிலை அடைந்தது. ஆன்மிக பேரணியின் பிரேம ஜோதியை வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,பெற்றுக்கொண்டார். இன்று 23ம் தேதி லாஸ் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி கலையரங் கில் சத்ய சாய் பாபாவின் 90வது பிறந்த தின கொண்டாட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி சத்ய சாய் சேவா அமைப்பினர் செய்து வருகின்றனர்.