கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2015 11:11
சங்கராபுரம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சங்கராபுரம் பகுதியில் அகல் விளக்கு விற்பனை சூடுபிடித்துள் ளது. கார்த்திகை தீபம் நாளை மறுநாள் (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இந்துக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதனை முன்னிட்டு, சங்கராபுரம் கடைவீதியில் அகல் விளக்கு விற்பனை செய்யப்படுகிறது. களி மண் மற்றும் பீங்கான் மூலம் தயார் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. களிமண் விளக்குகுள் (ஒரு முகமுடையது) பத்து ருபாய்க்கும், 5 முக பீங்கான் விளக்கு 15 ருபாய், 7 முக பீங்கான் விளக்கு 20 ருபாய் மற்றும் 9 முக பீங்கான் விளக்கு 25 ருபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.