பதிவு செய்த நாள்
24
நவ
2015
11:11
வேலூர்: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 600 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் இருந்து பத்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல வசதியாக, 600 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, வேலூரில் இருந்து, 300 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து, 100, திருப்பத்தூரில் இருந்து ,200 பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள், நாளை, 24ம் தேதியில் இருந்து, 26ம் தேதி வரை இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.