அண்ணாமலைக்கு போக முடியலையா! இதோ... வீட்டுக்கே வருகிறார் அண்ணாமலையார்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2015 01:11
திருவண்ணாமலை தீபத்துக்கு போக வேண்டுமென நினைக்கத்தான் செய்கிறோம்...ஆனால், பெரும் கூட்டத்தில் சென்று வருவதென்பது முடிகிற காரியமாகவா இருக்கிறது...என்ன தான் செய்வது என்பவர்கள், நாவுக்கரசர் பாடிய இந்த பதிகத்தை பாடுங்கள். அண்ணாமலைக்கு செல்பவர்கள் இந்த புத்தகத்தை கையில் எடுத்துச் சென்று தீபம் ஏற்றும் போது பாடுங்கள். கார்த்திகை தீபம் ஒளிர்வது போல், நம் வாழ்க்கையும் ஒளிர அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்பாளும் அருள்புரிவார்கள்.
பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா அண்டனே அமரர் கோவே அணியணா மலையு ளானே தொண்டனேன் உன்னை யல்லால் சொல்லுமா சொல்லில் லேனே.
உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடு இலேனே.
புரிசடை முடியின் மேலோர் பொருபுனல் கங்கை வைத்துக் கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா அரிகுல மலிந்த அண்ணா மலையுளாய் அலரின் மிக்க வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே.