தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள ஸ்ரீஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி சிறப்பானவர், எப்படியெனில், திருவீழிமிழலையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து சிவபெருமானிடம் சக்கரம் பெற்ற திருமால் ஜபத்தின் பெருமைகளை உணர்ந்து இந்த சிவயோக தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார். ஆகவே, இவர் ஹரிகுரு சிவயோக தட்சிணா மூர்த்தியானார். இவர் அமர்ந்திருக்கும் திருச்சுற்றை வலம் வரக்கூடாது என்று கூறுவர். காரணம், இறைவனின் திருமுடி வளர்ந்திருப்பதாக உள்ள ஐதீகத்தை ஒட்டி இந்தத் தடை. ஆகவே, தரிசித்தவுடன் வந்த வழியே திரும்பிவிட வேண்டும்.